இளையவன் இவனா?
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் ------------ ஆவார்.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார் ஆவார்.
2. மேடைகளில் நடிக்கப் பயன்படும் நாடகங்கள் ---------- ஆகும்.
மேடைகளில் நடிக்கப் பயன்படும் நாடகங்கள் மேடை நாடகங்கள் ஆகும்.
3. பேச்சுப் போட்டிக்கான தலைப்பு --------------.
பேச்சுப் போட்டிக்கான தலைப்பு மனத்தில் உறுதி வேண்டும்.
4. நெடுஞ்செழியன் போரிட்ட இடம் ------------ ஆகும்.
நெடுஞ்செழியன் போரிட்ட இடம் தலையாலங்கானம் ஆகும்.
5. எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று பாடியவர் -------------.
எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று பாடியவர் பாரதியார்
6. உள்ளதனையது ----------.
உள்ளதனையது உயர்வு.
7. பால்வடியும் முகத்தன் ------------.
பால்வடியும் முகத்தன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
8. பழந்தமிழ் நாடகங்கள் ------------ என்பதாக அறியப் பெறுகின்றன.
பழந்தமிழ் நாடகங்கள் கூத்து என்பதாக அறியப் பெறுகின்றன.
9. திருவள்ளுவர் இயற்றிய நூல் -----------.
திருவள்ளுவர் இயற்றிய நூல் திருக்குறள்
10. தென்னகர் எனப்பெறும் நகர் -----------.
தென்னகர் எனப்பெறும் நகர் மதுரை