இளையவன் இவனா?
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
இயல், இசை, நாடகம் என்பதாக முத்தமிழ் விளங்குவதை நாம் முந்தைய வகுப்பில் படித்தோம். கூத்து என்ற பெயரில் பழந்தமிழ் நாடகங்கள் அறியப் பெற்றிருக்கின்றன. அவை பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் காணப்பெறுகின்றன. இந்நூலுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் பல நாடக நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.அதன் மூலம் மறைந்துபோன பல நாடக நூல்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. பிற்காலத்தில் நாடக நூல்கள் பல தமிழில் வந்துள்ளன. தற்காலத்தில் புதிய நாடக முயற்சிகளும் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன. வானொலி, தொலைக்காட்சி நாடகங்கேளாடு, இதழ்களிலும் பிற ஊடகங்களிலும் நாடகங்கள் வெளியாகின்றன. படிக்கவும், நடிக்கவும்கூடிய வகையில் பல குறுநாடகங்கள் வந்துள்ளன. அந்த வகையில் சங்ககால மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய நாடகத்தை இப்போது பாடமாகப் பயில இருக்கின்றீர்கள்!