மணி |
: என்னக் கொடுமை ஐயா, சின்னஞ் சிறுவனாய் இருக்கின்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மீது ஏழுபேர் படைநடத்தி வந்தனரா? |
வள்ளியின்.. |
: ஆம் மணி... |
மணி |
: இது என்ன நீதி? ஒருவரோடு ஒருவர் போரிடுவதுதானே உலக இயற்கை. இது என்ன இயற்கைக்கு மாறாய்.. |
வள்ளியின்.. |
: நன்றாகக் கேட்டாய் மணி... இப்படித்தான் ஒரு சங்கப்புலவர் கேட்டார்.. அவர் பெயர் இடைக்குன்றூர் கிழார். “ஒருவனை ஒருவன்அடுதலும் தொலைதலும் புதுவது அன்று; இவ்வுலகத்து இயற்கை;” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலைப் பாடிப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போற்றுகின்றார். |
மணி |
: அந்தப் போர் என்னாயிற்று ஐயா? |
வள்ளியின்.. |
: நான் என்ன சொல்வது.. அந்தப் புலவர்களே சொல்கிறார்கள் கேள்.. |