12. இளையவன் இவனா?

இளையவன் இவனா?

பாடம்
Lesson


காட்சி - 4

இடம் : போர்க்களம்
பங்கேற்போர் : மக்கள், இடைக்குன்றூர்கிழார் முதலிய புலவர்கள்.

 
இடைக்குன்று.. : என்ன விந்தை... உலகியலில் ஒருவனை ஒருவன் அழித்தலும் வெல்லலும் இயற்கை. ஆனால் ஒருவனே தன்னை எதிர்த்த எழுவரை வென்று புகழ் பெற்ற வரலாறு கேட்டிருக்கிறீர்களா?
மக்கள் : சொல்லுங்கள், புலவரே, சொல்லுங்கள்.
இடைக்குன் : போர் வந்த செய்தி கேட்டுத் தன் கால் சலங்கைக் கழற்றி, வீரக்கழல் சூடியவன். குடுமி நீக்கிய தலையில் தமது குல வழக்கப்படி வேம்பின் ஒளிபொருந்திய தளிரை அணிந்தவன்.. தன்தேர்மீது ஏறி வில் சுமந்து நின்ற அவ்வீரன் தன்னை இளையவன் என்று இகழ்ந்த மன்னர்களை எதிர்த்து வென்ற பெருமை எத்துணை பெரிது.. இன்னும் குழந்தைப் பருவத்திற்குரிய ஐம்படைத் தாலியை நீக்கவும் இல்லை. பால் அருந்துதலை அவன் நிறுத்தவும் இல்லாத பாலகன்... சிறுவன்
மக்கள் : ஆமாம். ஆமாம். நம் பாண்டிய மன்னன்!
இடைக்குன் : தலையாலங்கானம் என்ற இடத்தில் போரிட்டுப் பகைவென்ற மன்னன்.. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். .
மக்கள் : வாழ்க! வாழ்க!
புலவர் : தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்..
மக்கள் : வாழ்க.. ! வாழ்க.. !