(ஆசிரியர் தம் ஓய்வறையில் அமர்ந்திருக்கிறார். மணி அவ்அறையின் வாயிலில் நின்று குரல் கொடுக்கிறான்) 
  
  
      |  மணி  | 
      : ஐயா, வணக்கம். உள்ளே வரலாமா? | 
      
    
	
      |   வள்ளியின்  | 
      :  யாரது? | 
      
    
	
  
      |  மணி  | 
      :  நான்தான் தங்களது மாணவன் மணி. | 
	  
      
      |   வள்ளியின்  | 
      :  மணியா, எந்த மணி? | 
      
    
	
      |   மணி  | 
      :   பதினொன்றாம் வகுப்பு ஆ பிரிவில் படிப்பவன். . .? | 
      
    
    
	
      |  வள்ளியின்  | 
      :  பதினொன்றாம் வகுப்பு ஆ பிரிவு மாணவன் . . . மணி (நினைவுக்கு வராமல் சற்றே தயங்கியபடி இழுக்கிறார்). | 
      
    
 
	
      |  மணி  | 
      :  ஐயா, எல்லாரும் குள்ளமணி என்று கூப்பிடுவார்களே . . . அந்த     மணி (குரல் வருத்தத்தில் குறைந்து ஒலிக்கிறது)  | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      : ஓ... (நினைவுக்கு வந்தவராய்) உள்ளே வா, மணி. | 
      
    
	
      |  மணி  | 
      : (வந்து கொண்டே) நன்றி. (உள் நுழைந்து ஆசிரியரைக் கண்டு பணிவுடன்) வணக்கம் ஐயா.  | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      : ஓ. . . மணியா, இப்போது நினைவுக்கு வருகிறது. என்ன செய்தி மணி? | 
	      
	
      |  மணி  | 
      : (தயங்கியபடி) ஐயா, நேற்று, நான் பள்ளிக்கு வரவில்லை... | 
	  
	 
      |   வள்ளியின்  | 
      :  அதுதான் தெரியுமே. உடல் நலக்குறைவு என்று விடுப்புக் கடிதம் கொடுத்திருந்தாயே. | 
	  
	  
      |   மணி  | 
      :   ஆமாம். ஐயா. | 
    
	
      |  வள்ளியின்  | 
      :   அப்புறம் என்ன? பாடத்தில் ஏதேனும் ஐயமா?  | 
      
    
	 
      |  மணி  | 
      :  இல்லை ஐயா. | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :  பிறகு..?  | 
      
    
	 
      |  மணி  | 
      :   (மீண்டும் தயக்கத்துடன்) ஐயா, நேற்று வகுப்பில் ஒரு சுற்றறிக்கை வந்திருக்கிறது. மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி.. . . . | 
      
    
	
      |   வள்ளியின்  | 
      :  ஆமாம். “மனத்தில் உறுதி வேண்டும்.” என்ற தலைப்பில் பேச வேண்டும் என்று. முதல் பரிசு கூட பத்தாயிரம் உருபா அல்லவா? | 
      
    
	 
      |  மணி  | 
      :  ஆமாம். ஐயா | 
      
    
	
      |   வள்ளியின்  | 
      :  நல்லது. நீ கூட கலந்து கொள்கிறாய் அல்லவா? உன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதே? நான் பார்த்தேனே... | 
	  
	  
	 
      |  மணி  | 
      :  ஆமாம். | 
      
    
	
      |   வள்ளியின்  | 
      :  வாழ்த்துகள். நன்றாகப் பேசி முதல் பரிசினைப் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.  | 
	  
	  
	 
      |  மணி  | 
      :  ஐயா, வந்து (தயக்கத்துடன்) அந்தப் போட்டியில். . .  | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :  கலந்து கொள்வதற்குக் கருத்துகள் வேண்டுமா?  | 
	
  
	  
	  
      |  மணி  | 
      :   (அவசரமாக மறுத்துத் தலையை ஆட்டியபடி) இல்லை ஐயா. அந்தப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை. அந்தப் பட்டியலில் என் பெயரை நீக்க வேண்டுகிறேன். | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :  ஏன்? மறுபடியும் உடல் நலமில்லையா? போட்டி நாளை மறுநாள் தானே? | 
	  
	  
      |  மணி  | 
      :   ஆமாம் ஐயா. ஆனால் என்னால் கலந்து கொள்ள...(தயங்குகின்றான்) | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      : ஏன்? | 
	  
	  
      |  மணி  | 
      :  ஐயா, அது வந்து (தயக்கத்துடன்) வேண்டாம் ஐயா. | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :  அதுதான் என்ன காரணம்?  | 
	  
	  
      |  மணி  | 
      :   (குனிந்த தலையுடன்) எல்லாரும் கேலி செய்கிறார்கள். | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   என்னவென்று? | 
	  
	  
      |  மணி  | 
      :   குள்ளன் குள்ளன் என்று. . . | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :  யார்? | 
	  
	  
      |  மணி  | 
      :   எல்லாரும் ஐயா, குறிப்பாக நமது வகுப்புத் தோழர்கள். | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   நான் பார்த்துக்கொள்கிறேன். அதற்காக நீ போட்டியில் கலந்து கொள்ள ஏன் தயங்குகிறாய்? | 
	  
	  
      |  மணி  | 
      :  ஒலிபெருக்கி உயரம் கூட இல்லை. நீயெல்லாம் பேசிப் பரிசு வாங்கப் போகிறாயா? என்று கேலி செய்கிறார்கள். நான் குள்ளமானவன் தானே ஐயா. அதனால்தானே எல்லாரும் என்னைக் குள்ளமணி என்றே கூப்பிடுகிறார்கள். (வருத்தத்தில் குரல் குன்றி விடுகிறது) | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   (சிரிக்கிறார்)  | 
	  
	  
      |  மணி  | 
      :   பார்த்தீர்களா, ஐயா. தாங்கள் கூடச் சிரிக்கிறீர்கள்... (அழுகை வந்து விடுகிறது) | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :  இல்லை மணி. உன் உருவு கண்டு நான் நகைக்கவில்லை. உன் அறியாமை கண்டுதான் நான் நகைத்தேன். | 
	  
	   
      |  மணி  | 
      :   அறியாமையா? | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   ஆமாம். | 
	  
	  
      |  மணி  | 
      :   ஒலிபெருக்கி உயரம் கூட இல்லாத நான், - ... | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :  (குறுக்கிட்டுச் சிரித்துக் கொண்டே) பெரிய பேருந்தினை ஓட்டும் ஓட்டுநர் பேருந்து உயரமா இருக்கிறார்? வானூர்தி செலுத்தும் வலவன் (Pilot) வானூர்தியைவிட உயரமாகவா இருக்கிறார்?. | 
	  
	  
      |  மணி  | 
      :  ஐயா, அது வந்து..? | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   நீ உயரம் குறைந்திருக்கிறாய் என்று யார் சொன்னது? | 
	  
      |  மணி  | 
      :   மற்றவர்களைக் காட்டிலும் நான் குள்ளன்தானே. | 
      
	
      |  வள்ளியின்  | 
      :  மணி, உண்மையில் உயரம் வெளியில் தெரியும் தோற்றத்தில் இல்லை. தெரியுமா? | 
	  
      |  மணி  | 
      :   எப்படி ஐயா? சேர்க்கையின்போது எனது உயரத்தைத் தான் அளந்து குறித்திருக்கிறார்களே..? | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   அது ஒரு அடையாளம். அதில் உனது உயரம் இவ்வளவு என்றுதானே குறித்தார்கள். நீ குள்ளமானவன் என்றா குறித்தார்கள்?. | 
	   
      |  மணி  | 
      :   இல்லை ஐயா. | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   அப்புறம் என்ன? நீ திருக்குறள் படித்திருக்கிறாய் தானே? | 
	  
       |  மணி  | 
      : ஆமாம். பாடப்பகுதியில் உள்ள திருக்குறள்களை. . . | 
	  
	  |  வள்ளியின்  | 
      :  திருவள்ளுவர் என்ன சொல்கிறார்? “வெள்ளத்தனைய மலர் நீட்டம்..” | 
	   
      |  மணி  | 
      :  “மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு”. | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   சரியாகச் சொன்னாய். இதன் பொருள் என்ன? | 
	    
		 | 
		  | 
    
	   
      |  மணி  | 
      : வெள்ளத்தின் உயரம் எவ்வளவோ, அவ்வளவு உயரம் அந்த நீர்நிலையில் வளரும் மலரின் நிலையும் உயரமாக இருக்கும் என்று விளக்கம் தந்திருக்கிறீர்கள் ஐயா. | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      : அதுபோல் மனிதனின் உயரம் என்பது . .  | 
	   
      |  மணி  | 
      :  அவர் அவர்தம் உள்ளத்தில் உள்ள எண்ணத்தின் உயர்வைப் பொறுத்து அமைவது ஐயா. | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      : சரியாகச் சொன்னாய் மணி! அப்படியானால் உனது உயரம்... | 
	   
      |  மணி  | 
      :  மற்றவர்கள் என்னைக் குள்ளன் என்று சொல்கிறார்களே.. | 
	  
	  |  வள்ளியின்  | 
      :  அப்படியானால் அவர்கள் உள்ளத்தால் உயரம் குன்றியவர்கள் என்றுதானே பொருள்... | 
	   
      |  மணி  | 
      :   (தயங்கியபடி தலைநிமிர்கிறான். சற்றே நம்பிக்கை கண்ணில் தோன்றுகிறது) ஆனாலும். . . | 
	  
	
      |  வள்ளியின்  | 
      :   என்ன ஆனாலும். .. | 
	   
      |  மணி  | 
      :  பேச்சுப் போட்டியில் நான் பங்கேற்க விரும்பவில்லை ஐயா. | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :  ஏன்? | 
	   
      |  மணி  | 
      :   என்னைவிடப் பெரியவர்கள், கலந்து கொண்டு பேசுவார்களே..? | 
    
	
      |  வள்ளியின்  | 
      :  போட்டி என்றால் பலரும் கலந்து கொள்ளத்தானே செய்வார்கள். நாம் நன்றாகப் பேசத் தயாராகிவிட்டால் மற்றவர்களைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? | 
	   
      |  மணி  | 
      :   இல்லை ஐயா. மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் இளையவனாகத் தெரியும் என் பேச்சை. . .. | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   புரிகிறது மணி, உனது சிக்கல் இதுதான். நீ மிகவும் இளையவன் என்று கவலைப்படுகிறாய். இல்லையா? | 
	   
      |  மணி  | 
      : ஆம், ஐயா. | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   மணி. உனக்கு நெடுஞ்செழிய மன்னன் கதை தெரியுமா? | 
	   
      |  மணி  | 
      :  புறநானூறு நடத்துகிறபோது சொன்னீர்களே.. பாண்டியன் நெடுஞ்செழியன் என்று... | 
      
    
	
      |  வள்ளியின்  | 
      :   ஆமாம். மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னன். மிகச் சிறிய வயதிலேயே மன்னனாகப் பட்டம் ஏற்றவன்.. எவ்வளவு சிறியவன் தெரியுமா? பால் வடியும் முகத்தன். சிறு குழந்தைகள் அணியும் ஐம்படைத் தாலியை இன்னும் அணிந்திருப்பவன்.. அவனது ஆட்சியில் ஒரு நாள்... |