தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-.0-பாட முன்னுரை

  • 1.0 பாடமுன்னுரை

    பாரதி ஒரு தேசியக் கவிஞர் (National Poet). தாம் ஓர் இந்தியன் என்பதில் எவ்வளவு பெருமை கொண்டாரோ, அதைப் போலவே தாம் ஒரு தமிழன் என்பதிலும் பெருமை கொண்டார். தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம், தமிழின் பெருமையைப் பேசி மகிழ்ந்தார். தமிழின் பெருமை உலகளாவிய நிலையில் பரவ வேண்டும் என்று விரும்பினார். தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைப் புகழ்ந்து பாடினார். தமிழ் இனம் எத்தகைய பாரம்பரியப் பெருமை உடையது என்பதனை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். இவை பற்றிய பாரதியின் கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:35:33(இந்திய நேரம்)