தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-நாலடியார்

 • பாடம் - 1

  C01211 நாலடியார்
  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


  துறவறம் பற்றியும், இல்லறம் பற்றியும் நாலடியாரில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கூறப்பட்டுள்ளன. செல்வம், யாக்கை ஆகியவற்றின் நிலையாமை பற்றியும், இல்லறத்தில் பின்பற்ற வேண்டிய நெறிகள் பற்றியும் நாலடியார் கூறுபவையும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன. நட்பு, சான்றோர் இயல்பு, கல்வி ஆகியவை பற்றி நாலடியார் கூறும் கருத்துகளும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?  திருக்குறளை அடியொற்றி இயற்றப்பட்ட அற இலக்கியமாக நாலடியார் விளங்குவதை அடையாளம் காணலாம்.
  தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என்ற நிலைகளில் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் அற இலக்கியமாக நாலடியார் நிற்பதை இனம் காணலாம்.
  இலக்கியச் சுவையிலும்,     உவமைச் சிறப்பிலும், பழமொழிகளைக் கையாள்வதிலும், எடுத்துக் கூறும் முறையிலும் நாலடியார் சிறந்து விளங்குவதைச் சுட்டிக் காட்டலாம்.
  வாழ்வியல் மதிப்புகளை, இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று அற நோக்கில் பட்டியலிட்டுக் காட்டலாம்.
  திருக்குறளை ஒட்டி இயற்றப்பட்ட அற இலக்கியமாகிய நாலடியார் சமணர்களின் தமிழ்க்கொடை என்பதை இனம் காணலாம்.
  இடைக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், அவர்கள் பயன்படுத்திய அளவுக் கருவிகள், நில அளவைகள், தொலைவு அளவைகள் ஆகியவற்றைத் தொகுத்துக் கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:08:08(இந்திய நேரம்)