தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும்

 • பாடம் - 4
  C01214  இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும்
  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


  கையில் பொருள் இல்லாதவர்க்கும், புலனடக்கம் இல்லாதவர்க்கும், கல்வியில்லாதவர்க்கும், எத்தகைய துன்பங்கள் வரும் என்பதனை இன்னா நாற்பது குறிப்பிடுகிறது.

  கணவன் மனைவி உறவில் - பெற்றோர் உறவில் எவை இன்னாதவை என்றும் எடுத்துரைக்கிறது.

  மேலும் அரசனுக்கும், சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும் இன்னா பயப்பனவை பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன. இவை இந்தப் பாடத்தின் முதல் பகுதியில் கூறப்படுகின்றன.

  கல்வி, அறச்செயல்கள், நட்பு ஆகியவை எவ்வகையில் இனிமை பயப்பனவாக உள்ளன என்பதனை இனியவை நாற்பது கூறுகிறது.

  கணவன் மனைவிக்கு இடையிலான ஒற்றுமையின் வாயிலாகக் கிடைக்கும் இன்பம், பெற்றோரைப் பேணுதலால் கிடைக்கும் இன்பம், அரசன், குடிமக்கள் ஆகியோரின் செயல்களால் கிடைக்கும் இன்பம் ஆகியவற்றைப் பற்றியும் இனியவை நாற்பது கூறுகிறது. இக்கருத்துகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
   

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மனிதனுக்கு இன்னாதனவற்றையும் இனியனவற்றையும் தனித்தனியாகத் தொகுத்து இரண்டு அறநூல்கள் இயற்றப்பட்டுள்ளதை அடையாளம் காண முடிகிறது.

  இரு வேறு புலவர்கள் இந்நூல்களை இயற்றியிருந்தாலும் இன்னா நாற்பதின் நேர் எதிர்மறையாக இனியவை நாற்பது அமைந்துள்ளதை இனம் காணலாம்.

  தனிமனிதனுக்கும் சமுதாயத்தின் பல்வேறு வகைப்பட்ட (அரசன், அந்தணர், உழவர்) குடிமக்களுக்கும் இன்னாதன எவை, இனியவை எவை என்பன பற்றி இந்நூல்களில் தொகுக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

  அக்கால மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

  திருக்குறள், நாலடியார் முதலிய அற நூல்களின் சாரம் இவ்விரு நூல்களிலும் படிந்து கிடப்பதை இனம் காண முடிகிறது.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:11:37(இந்திய நேரம்)