தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--பாடமுன்னுரை

  • 1.0
    பாட முன்னுரை

    தமிழ், இலக்கண வளமுடைய மொழி. எள்ளில் இருந்து எண்ணெய் கிடைப்பது போல், இலக்கியங்களில் இருந்து கிடைக்கப் பெற்றது இலக்கணம். தமிழ் ஏறத்தாழ ஐம்பது இலக்கண நூல்களைக் கொண்டுள்ளது.

    தமிழ் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணங்களைக் கூறுவன. எழுத்து - எழுத்துகளால் உருவாகும் சொல் - சொல் உணர்த்தும் பொருள் - பொருளைச் சொல்வதற்குரிய வடிவமைப்பு (யாப்பு) முறை - சொல்லும் முறைக்குப் பயன்படும் அணி என ஐவகை இலக்கணங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக உள்ளன.

    இவற்றுள் எழுத்தும், சொல்லும் பொருளைக் குறிக்க வந்தவை. யாப்பும் அணியும் அப்பொருள் சிறக்க வந்தவை. நடுநாயகமாய் நனி சிறந்து விளங்குவது ‘பொருள்’ ஒன்றே! அப்பொருள் இலக்கணத்தின் ஒரு பிரிவாகிய அகப்பொருள் பற்றிக் கூறுவதாக இப்பாடம் அமைகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 15:27:51(இந்திய நேரம்)