தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செம்பு, மரம், தந்தம்,மண் ஆகியவற்றால் ஆன சிற்பங்கள்

  • பாடம் - 3

    D05123 செம்பு, மரம், தந்தம், மண் ஆகியவற்றால் ஆன சிற்பங்கள்

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழகத்தில் எந்தெந்தக் காலத்தில் எவ்வெவ்வகைச் செப்புத் திருமேனிகள் வடிக்கப் பட்டன? அவை வெளிப்படுத்தும் செய்திகள் என்னென்ன? என்பவற்றைப் பற்றி இந்தப் பாடம் விளக்கிக் கூறுகிறது.

    மரச் சிற்பங்களின் வகைகள், தேர்ச் சிற்பங்களின் அமைப்பு, கோயிற் கதவுகளில் அமைக்கப் பட்டுள்ள சிற்பங்கள், செட்டி நாட்டுக் கலை ஆகியன பற்றியும், தந்தச் சிற்பங்களின் வகைகள் மற்றும் அமைப்புப் பற்றியும் கூறுகிறது.

    எந்தெந்த ஊர்களில் பண்டைய சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கபட்டன, எவ்வகைச் சிற்பங்கள் செய்யப் பட்டன, என்பது பற்றியும் சுதைச் சிற்பங்கள் பற்றி இலக்கியத்தில் சொல்லப் பட்ட செய்திகள், கோயில் கருவறைகள், விமானங்கள், கோபுரங்கள் ஆகியவற்றில் வைக்கப் பட்டுள்ள சுதைச் சிற்பங்களின் கதைக்கூறுகள், அமைவிடங்கள் பற்றிக் கூறுகிறது. நவ பாஷாணக் கலவை செய்யும் முறை பற்றியும், கடு சர்க்கரைக் கலவை பற்றியும் இப்பாடம் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தமிழகத்தில் வடிக்கப்பட்ட சிறப்புமிகு செப்புத் திருமேனிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • செப்புத் திருமேனிகள் அமைக்கப் படுவதற்கான காரணங்களை அறியலாம்.
    • மரத்தால் செதுக்கப்படும் சிற்பங்களின் வகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
    • தந்தத்தால் எவ்வகைச் சிற்பங்கள் செய்யப்பட்டன என அறியலாம்.
    • சுடுமண் சிற்பங்கள் அமைப்பு முறை, எவ்வெவ்வகைச் சுடுமண் சிற்பங்கள் செய்யப்பட்டன, அவை எங்கெங்குள்ளன என்பது பற்றிய செய்திகள், சுதைச் சிற்பங்கள் பற்றிய இலக்கியச் செய்தி, என்பன பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:52:45(இந்திய நேரம்)