தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாண்டியர் - நாயக்கர் காலச் சிற்பக்கலை

 • பாடம் - 2

  D05122 பாண்டியர் - நாயக்கர் காலச் சிற்பக்கலை

  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  பல்லவரது சமகாலத்திலும், அதற்குப் பின்னரும் ஆண்ட பாண்டியரின் குடைவரைக் கோயில் சிற்பங்கள், அவர்களுடைய ஒரே ஓர் ஒற்றைக்கல் இரதமான கழுகுமலை வெட்டுவான் கோயிலில் காணப்படும் சிற்பங்கள், அவர்களுடைய கட்டுமானக் கோயில் சிற்பங்கள் பற்றி விளக்குகிறது.

  தமிழகக் கோயில் கலை வரலாற்றில் விசயநகர- நாயக்கர் சிற்பங்கள் பெறும் இடம் என்ன என்பது பற்றி விளக்குகிறது.

  நாயக்கர்கள் புதிதாகக் கட்டிய கோயில்களிலும், புதுப்பித்த கோயில்களிலும் உள்ள சிறப்பான சிற்பங்கள் பற்றி இப்பாடம் விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • முற்காலப் பாண்டியர், பல்லவரது குடைவரை மரபைப் பின்பற்றியும் அவற்றில் சிற்சில மாற்றங்கள் செய்தும் அமைத்த குடைவரைச் சிற்பங்கள் பற்றி அறியலாம். பல்லவர்க்கு முன்பே பிள்ளையார் பட்டியில் பாண்டியர் அமைத்த குடைவரை பற்றியும், விநாயகர் சிற்பம் பற்றியும் அறியலாம்.
  • கட்டட வகைச் சிற்பம் எனக் கொள்ளப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயிலில் காணப்படும் சிற்பங்கள் பற்றித் தெரியலாம்.
  • முற்காலப் பாண்டியரின் கட்டுமானக் கோயில்களில் அழிந்தவை போக எஞ்சிய ஒரு சில கோயில் சிற்பங்களை அறியலாம்.
  • பிற்காலப் பாண்டியரும் கோயில்கள், கோபுரங்கள், மண்டபங்கள் கட்டுவதில் ஆர்வம் காட்டியதை அறியலாம்.
  • தமிழகத்தில் விசயநகர-நாயக்கர் படைத்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ள கோயில்களைத் தெரிந்து கொள்ளலாம்.
  • புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிற்பங்களை அறியலாம்.
  • நாயக்கர்களுக்கே உரித்தான சிற்பக் கலைப் பாணியைப் புரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:51:02(இந்திய நேரம்)