தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பல்லவர் - சோழர் காலச் சிற்பக்கலை

 • பாடம் - 1

  D05121 பல்லவர் - சோழர் காலச் சிற்பக்கலை

  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  பல்லவரின் குடைவரைக் கோயில்கள், கட்டட வகைக் கற்சிற்பங்கள் என அழைக்கப்படும் ஒற்றைக்கல் இரதங்கள், கட்டுமானக் கோயில்கள் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள் பற்றி விளக்குகிறது.

  இப்பாடம் சோழர் காலச் சிற்பக் கலையை, முற்காலச் சோழர் சிற்பங்கள், பிற்காலச் சோழர் சிற்பங்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்து விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சங்ககாலம் மற்றும் சங்கம் மருவிய காலத் தமிழகத்தில் இருந்த சிற்பக் கலை பற்றிய இலக்கியச் சான்றுகளை அறியலாம்.
  • நடுகல் பற்றிய செய்திகளை அறியலாம்.
  • தமிழகத்தில் முதன் முதலாகப் பாறையைக் குடைந்து இறைவனுக்குக் கோயில் எழுப்பிய காலத்தைச் சேர்ந்த சிற்பங்களைப் பற்றி அறியலாம்.
  • ஒற்றைக்கல் இரதங்களில் இடம் பெறும் சிற்பங்கள் பற்றித் தெளியலாம்.
  • முதல் முதலாகக் கற்களை வைத்துக் கட்டிய கோயில்களில் இடம் பெறும் சிற்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • பல்லவர் காலத்துச் சிற்பக் கலையின் பொதுவான இயல்புகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • சோழர் சிற்பங்களின் பொதுவான இலக்கணத்தினை அறியலாம்.
  • பல்லவர் மற்றும் முற்காலப் பாண்டியரது சிற்பங்களினின்றும் சோழர் காலச் சிற்பங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:49:30(இந்திய நேரம்)