தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பல்லவரது சிற்பக் கலை

  • 1.2 பல்லவரது சிற்பக் கலை

    தமிழகத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவப் பெருவேந்தர்களாவர். இவர்களே தமிழகத்தில் கோயில்களைக் குடைவித்தும் கட்டுவித்தும் அவைகளில் சிற்பங்கள் பலவற்றைச் செதுக்கியும் தமிழகத்திற்குக் கற்கோயில்களை அறிமுகம் செய்தவர்கள் ஆவர்.

    1.2.1 வகைகள்
    பல்லவர்களின் கோயில் அமைப்பு மூன்று வகைப்படும்.

    (1) குடைவரைக் கோயில்
    (2) கட்டட வகைச் சிற்பம் அல்லது ஒற்றைக் கற்கோயில்
    (3) கட்டுமானக் கோயில்

    கால வளர்ச்சியில் இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியவை. இவற்றில் பல்லவர்களின் சிற்பக் கலைச் சிறப்பு எவ்வாறு அமைந்துள்ளது என இனிக் காணலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:48:13(இந்திய நேரம்)