தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அஷ்டாங்க விமானக் கோயில் சிற்பங்கள்

  • 2.4 அஷ்டாங்க விமானக் கோயில் சிற்பங்கள்

    பல்லவர்களைப் போலவே பாண்டியர்களும் அஷ்டாங்க விமானக் கோயில்களை எழுப்பியுள்ளனர். அவை மதுரை கூடலழகர் கோயிலும், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலும் ஆகும். இக்கோயில்கள் நாயக்க மன்னர்களது காலத்தில் புதுப்பிக்கப் பட்டுப் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. மதுரை கூடலழகர் கோயில் கருவறையில் இடம் பெற்றுள்ள அமர்ந்த கோலச் சிற்பத்தைப் பாண்டியர் சிற்பங்களில் குறிப்பிடத் தக்கதாகக் கூறலாம். கம்பீரமான தோற்றமுள்ள இத்திருச்சிற்பம் தற்போது சுதை பூசப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

    கூடலழகர் கோயில்

    சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலின் வெளிப் பிரகாரத்தின் வடக்கே நரசிம்மர் இரணியனோடு சண்டையிடும் சிற்பம் உள்ளது. இரணியனை வதம் செய்து அவனது குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்து கொள்ளும் காட்சியைச் சித்திரிக்கின்ற சிற்பமும் மிக அழகு வாய்ந்ததாகும். இரணியன் சிவபெருமானிடம் ஆயுதங்களாலும் சாவு வரக் கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இந்த இரு சிற்பங்களிலும் நரசிம்மர் கரங்களில் சங்கு சக்கரம் கூட இன்றிப் படைக்கப் பட்டிருப்பது தனிச் சிறப்புடையதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:49:55(இந்திய நேரம்)