தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-2.7 அளவை உரைநடை

  • 2.7 அளவை உரைநடை

    அளவை உரைநடை (Argumentative prose) என்பது விவாதிக்கும் போக்கில் அமையும். ஓர் உட்கோளைப் படிப்போர் இணங்கி ஏற்றுக்கொள்ளும் வகையில் பரிந்து வலியுறுத்தும், நன்முறையில் எழுதப்பட்ட அளவை உரைநடை, அறிவாராய்ச்சியைத் தூண்டுவதோடு அமையாமல் உணர்ச்சிக்கும் விருந்து தரும். மிக உயர்ந்த அளவை உரைநடை படிக்கும் வாசகரை ‘நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்’ என்று கட்டாயப்படுத்துவதில்லை. மாறாக, பிரச்சினைகளை நுணுக்கமாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் சிந்திக்கவே தூண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:34:47(இந்திய நேரம்)