தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாடம் - 5
  P10235- சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள்
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்றும், நாடக உலகின் இமயமலை என்றும் போற்றப்பட்ட தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பிறப்பு, கல்வி, இசைப்பயிற்சி ஆகியவற்றைக் கூறுகிறது.

  சுவாமிகள் நடிகராகவும், நாடக ஆசிரியராகவும், நாடக இயக்குநராகவும் திகழ்ந்ததைச் சொல்கிறது. தமிழில் பெரும்புலமை பெற்ற அவரது முயற்சியில் தமிழ் நாடகம் எவ்வாறு மொழித்தகுதி பெற்றது என்பதனைச் சொல்கிறது.

  தமிழ் நாடக மேடையைச் சுவாமிகளின் நாடகங்கள் கால் நூற்றாண்டுக் காலம் எவ்வாறு ஆட்சி செலுத்தின என்பதைச் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
  • நாடகக் கலைஞர்கள் கல்வி, கேள்விகளில் திறமை பெற்று இருக்க வேண்டும் என்பதற்குச் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறே சான்றாகத் திகழ்வதை அறியலாம்.
  • சுவாமிகள் எழுதிய நாடகங்களின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ளலாம்.
  • தெருக்கூத்து என்னும் நிலையிலிருந்து மேடை நாடகம் என்னும் உயர் நிலைக்குத் தமிழ் நாடகங்களை உயர்த்தியதை அறிந்து கொள்ளலாம்.
  • தமக்குப் பின்னர், நாடகக் கலையை வளர்க்க மிகப் பெரிய மாணவர் பட்டாளத்தை உருவாக்கியதை அறியலாம்.

  பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:51:01(இந்திய நேரம்)