தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.4 தொகுப்புரை

    தமிழ்நாடக வரலாறு சுவாமிகளின் வருகைக்குப் பின்னர்த்தான் கண்ணியம் மிக்க வரலாறாக மாறியது. தெருக்கூத்து என்பது நாடகக் கலை என்னும் மாற்றத்தைப் பெற்றது.

    சுவாமிகள் தமிழ் நாடக உலகின் இமயமலை என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டது முற்றிலும் பொருத்தமான புகழுரையாகும்.

    தமிழ் நாடக வளர்ச்சி வரலாற்றை வெளிப்படுத்த வேண்டுமானால் சுவாமிகளின் நாடகங்களை மீண்டும் மேடை ஏற்றுவது இன்றிமையாத ஒன்று.

    சுவாமிகளின் அனைத்து நாடகங்களையும் அச்சேற்றி அழியாமல் பாதுகாப்பது தமிழ் நாடக உலகினரின் தலையாய கடமையாகும்.

    1)

    சங்கரதாஸ் சுவாமிகளின் மொழிவளத்தை எப்படிப் பிரித்துப் பார்க்கலாம்?

    2)
    வஜ்ஜிரத்தால் தூண் நிறுத்தி, மரகதத்தால் சட்டம் பூட்டி என்ற பாடல் வரிகளைச் சுவாமிகள் எந்த நாடகத்தில் பாடினார்?
    3)
    வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளி பறவைகளை ஏன் விரட்டுகிறாள்?
    4)
    சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் ‘சிங்கத்தோடு போராடினாயே’ என்னும் சொற்களில் சுவாமிகள் எவ்வாறு சொற்சிலம்பம் செய்கிறார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-08-2017 19:17:58(இந்திய நேரம்)