தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 3.7 தொகுப்புரை


  இதுவரை ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்று நினைவுபடுத்திப் பாருங்கள் :

  • ந. பிச்சமூர்த்தி என்னும் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
  • அவரது கவிதைகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
  • மரபில் இருந்து விலகித் தமிழில் புதுக்கவிதை தோன்றுவதற்குப் பிச்சமூர்த்தி ஆற்றிய பங்கு பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
  • அவரது கவிதைகளில் பாடப்பெறும் பொருள்கள் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.
  • பிச்சமூர்த்தியின் படைப்புக் கலைத்திறன்கள் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
  • பிச்சமூர்த்தியின் வாழ்வியல் பற்றிய பார்வையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
  தன்மதிப்பீடு : வினாக்கள் - II
  1)
  ‘பெட்டிக்கடை நாரணன்’ என்னும் கவிதை எந்தச் சமூக இழிவுகளை எள்ளி நகையாடுகிறது?
  2)
  ‘விஞ்ஞானி’ என்ற கவிதை எதை உணர்த்துகிறது?
  3)
  ‘காட்டுவாத்து’ என்ன விளைவை ஏற்படுத்துகிறது?
  4)
  பிச்சமூர்த்தி கவிதைகளின் வாழ்வியல் பற்றிய கோட்பாடு என்ன?
  நூல் பட்டியல்

  1. பிச்சமூர்த்தி கவிதைகள்,
   அக்டோபர் 1985,
   க்ரியா,
   268, இராயப்பேட்டை நெடுஞ்சாலை,
   சென்னை - 600 014.

   விலை ரூபாய் 30/.

   வெளியிட்டோர் முகவரி - ஆங்கிலத்தில் :

   Publisher,
   CRE-A,
   268, Royapettah High Road,
   Chennai - 600 014.

   Price Rs. 30/-

  2. ந. பிச்சமூர்த்தி கவிதைகள்,
   ஆகஸ்ட், 2000
   மதிநிலையம், சென்னை

  3. ந. பிச்சமூர்த்தியின் கலை - மரபும் மனித நேயமும்
   சுந்தர ராமசாமி
   காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்,
   டிசம்பர் 2001.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:18:10(இந்திய நேரம்)