தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிள்ளைத் தமிழ்

 • பாடம் - 6

  P10346 பாவேந்தர் பிள்ளைத் தமிழ்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  சிற்றிலக்கியங்களை அறிமுகப் படுத்தி, பிள்ளைத் தமிழின் இலக்கணங்களைக் கூறுகிறது. பிள்ளைத் தமிழ் நூல்களில் சிறந்த சிலவற்றைப் பற்றிச் சொல்கிறது.

  பாவேந்தர் பிள்ளைத் தமிழ் பாடிய புலவர் புலமைப்பித்தனைப் பற்றிக் கூறி, அவர் நூலின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. பாரதிதாசனின் கருத்துகளை, பாவலர் எவ்வாறு ரசித்து, அவற்றைத் தம் நூலில் அமைத்திருக்கிறார் என்பதை விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
  •  
  பிள்ளைத் தமிழ் நூல்களைப் பட்டியல் இடலாம். அதன் இலக்கணத்தைப் பற்றி அறியலாம்.
  •  
  பாவேந்தர் பாரதிதாசன் கருத்துகள் சிலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
  •  
  அவரைப் பற்றிய பிள்ளைத் தமிழில் அந்தக் கருத்துகள் பிரதிபலிப்பதைக் காணலாம். அக்கருத்துகளைப் புலவர் புலமைப்பித்தன் எவ்வாறு போற்றுகிறார் என்பதையும், அவற்றை அவர் வெளிப்படுத்தும் முறையையும் அறிந்து மகிழலாம்.
  •  
  தமிழின் சிறப்பும் பாரதிதாசன் பெருமையும், பழைய தமிழ்ப் பா வடிவத்தில் அமைந்திருப்பதைக் கண்டு களிக்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:47:28(இந்திய நேரம்)