தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 5.0 பாட முன்னுரை-5.0 பாட முன்னுரை

  • 5.0 பாடமுன்னுரை

    கோவை, தூது, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் முதலிய இலக்கிய வகைகளைச் சிற்றிலக்கியங்கள் என்று தமிழில் குறிப்பிடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவை பற்றிய விரிவான செய்திகளைச் சிற்றிலக்கியம் என்னும் தலைப்பில் அமைந்த பாடத்தில் படித்திருப்பீர்கள் சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் என்றும் வழங்கப்படுகின்றன.

    சைவ சமயக் கடவுளர்களாகிய சிவன், உமை, முருகன், விநாயகர் ஆகிய கடவுளர்கள் மீது சிற்றிலக்கியங்கள் பல பாடப்பெற்றுள்ளன. பெரும்பாலான கவிஞர்கள் இக்கடவுளர்கள் அனைவர் மீதும் நூல்கள் யாத்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே முருகனையும், உமையையும் தனித்துப் பாடினர். பன்னிரு திருமுறைகளில் இடம் பெற்ற இலக்கியங்களை முன்னைய பாடங்களில் தெரிந்து தெளிந்ததால், எஞ்சிய சிற்றிலக்கியங்கள் குறித்த இப்பாடம் ‘சைவச் சிற்றிலக்கியங்கள்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:15:30(இந்திய நேரம்)