தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 6.0 பாட முன்னுரை-6.0 பாட முன்னுரை

  • 6.0 பாடமுன்னுரை

    சைவ சமய இலக்கிய வகைகளுள் ஒன்று தலபுராணங்கள், ‘ஸ்தலம்’ என்ற வடசொல் தமிழில் தலம் என்று திரிந்து வழங்கி வருகிறது, தலம் என்று சொல்லுக்கு இடம் என்பது பொருள், என்றாலும் சமயத்துறையில் இச்சொல்லுக்கு இறைவன் எழுந்தருளியுள்ள இடம் என்றே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ‘தலயாத்திரை', தலவிசேடம், 'தலவிருட்சம்’ என்ற தொடர்களில் இப்பொருள் அமைந்திருத்தலைக் காணலாம். இவற்றைப்போல் இறைவன் எழுந்தருளி அருள் வழங்கும் ஓர் ஊரின் பழைய வரலாறுகளைக் கூறும் நூலைச் சைவர்கள் தலபுராணம் என்று கூறுவர், தேவார மூவர்களால் பாடப்பெற்ற தலங்கள் பிற்காலத்தில் பெருஞ்சிறப்புப் பெற்றன. அவ்வாறே திருவாசகப் பாடல் பெற்ற தலங்களும் சிறந்தன. புலமை நலம் மிக்க சைவக் கவிஞர்கள் இத்தகு தலங்களின் பெருமை பேசும் அழகிய நூல்களை இயற்றினர். சமயத் துறையைச் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை மேலும் வளர்த்து வளம் பெறச் செய்ய இந்நூல்கள் பெரிதும் துணை நின்றன. இத்தகு தலபுராணங்கள் பெரிய அளவில் சிவனைக் குறித்தே எழுந்தன. முருகத் தலங்கள் குறித்து மிகச் சிலவே பாடப் பெற்றுள்ளன. இத்தகைய தலபுராணங்கள் குறித்த ஒரு சிறு அறிமுகமாகவே இப்பகுதி அமைகிறது. தலபுராணங்களுள் பல மிகுந்த இலக்கியத் தரமும், சுவையும் மிக்கனவாக அமைந்துள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:17:51(இந்திய நேரம்)