தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிற நூல்கள்

 • E

  பாடம் - 6

  P20226 பிற நூல்கள்  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடத்தில் வைணவக் காப்பியங்களாகிய கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்றவை விளக்கம் பெறுகின்றன. வைணவ சமயத்தார் எழுதிய மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள், மாறன் பாப்பாவினம் ஆகிய இலக்கண நூல்களும் பேசப்படுகின்றன.

  இவை தவிர வைணவச் சிற்றிலக்கியங்களாகிய இராமானுச நூற்றந்தாதி போன்ற சில அந்தாதி நூல்களும் சிலேடை உலா, சீரங்க நாயகியார் ஊசல், திருவரங்கக் கலம்பகம், முக்கூடற்பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களும் விரிவாகச் சொல்லப்படுகின்றன.

  தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கு வைணவம் ஆற்றிய பாங்கினையும் விளக்குகிறது இப்பாடம்.  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • வைணவம் தொடர்பான இலக்கண இலக்கியங்களை இனங் காணலாம்.
  • காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் காட்டும் வைணவத் தொடர்புடைய கதைகள், செய்திகள் ஆகியவற்றைத் தொகுத்துக் கொள்ளலாம்.
  • திருமாலை இலக்கியப் படைப்பாளிகள் பதிவு செய்துள்ள பாங்கினை அடையாளம் காணலாம்.
  • ஆழ்வார்களின் பக்தி இயக்கம் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் படைப்புகளை வளப்படுத்திய முறைகளைச் சான்றுகள் வழிப் பட்டியல் இடலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:31:13(இந்திய நேரம்)