தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- - படைப்பிலக்கியமும் சிறுகதையும்

 • பாடம் - 1

  P20331 படைப்பிலக்கியமும் சிறுகதையும்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


  படைப்பிலக்கியம் என்பது எது என்று விளக்குகிறது. படைப்பிலக்கியத்தின் ஒரு கூறான சிறுகதையின் அமைப்பைச் சொல்கிறது. அதன் இலக்கணங்களை விரித்துரைக்கிறது. சிறுகதை எழுத்தாளருக்குத் தேவையான தகுதிகளை வரையறுக்கிறது. சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் சிலரை அறிமுகப்படுத்துகிறது. சில சிறந்த சிறுகதைகளின் வடிவத்தையும் வெளிப்பாட்டையும் அடையாளம் காட்டுகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • படைப்பிலக்கியம் இன்னது என்பதை அறியலாம்.

  • சிறுகதையின் வடிவத்தை, அதன் இலக்கணங்களைத் தெரிந்து கொள்ளலாம். சிக்கல், கதைமாந்தர், மொழிநடை, உத்தி முதலியவை பற்றி அறியலாம்.

  • சிறந்த சிறுகதைகளை அடையாளம் காணலாம்.

  • சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை இனம் காணலாம்.

  • சிறுகதை பற்றிய கருத்துகளையும் கோட்பாடுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:25:59(இந்திய நேரம்)