தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாடம் - 4

  P20414 இதழ்களின் சிறப்பும் நோக்கமும்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் இதழ்களின் சிறப்பையும் நோக்கத்தையும் விளக்கமாகச் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது இதழ்களின் சிறப்பை அறியலாம். இதழ்களின் நோக்கத்தையும் விளக்கமாக அறியலாம்.

  • இதழ்கள் மக்களாட்சியின் காவல் தேவதையாக விளங்கி, செய்திகளைப் பரப்பியும், விளக்கியும், விமர்சித்தும் கருத்துகளை உருவாக்குவதை அறிந்து கொள்ளலாம்.

  • அரசியலமைப்பில் இன்றியமையா இடம் பெறும் இதழ்கள் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், எதிர்க்கட்சியாகச் செயலாற்றியும், வளர்ச்சியில் பங்கு பெற்றுச் சிறப்புறுவதை அறியலாம்.

  • இதழ்களின் பொதுவான நோக்கங்களான தெரிவித்தல், நெறிப்படுத்தல், பொழுதுபோக்கு, வியாபாரம், சேவை முதலியவற்றை அறியலாம்.

  • இதழ்களின் சிறப்பு நோக்கங்களை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:49:52(இந்திய நேரம்)