தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.6 தொகுப்புரை

3.6 தொகுப்புரை

இவ்வாறு திரு அவதாரம், திருவாக்குப் புராணம், கிறிஸ்து மான்மியம், சுடர்மணி, இயேசு காவியம் ஆகிய ஐந்து காப்பியங்களைப் பற்றிப் பல செய்திகளை இப் பாடத்தில் தெரிந்து கொண்டோம். இக்காப்பியங்களின் ஆசிரியர்கள் பற்றியும், இக்காப்பியங்களை அவர்கள் படைத்த சூழல்கள், நோக்கங்கள் பற்றியும் அறிந்தோம். இக்காப்பியங்கள் விவிலியக் கருத்துகளையும் செய்திகளையும் கூறும் முறைகள் பற்றியும், இவற்றின் இலக்கியத் திறன்களையும் உணர்ந்து கொண்டோம். தமிழிலுள்ள பெரிய காப்பியப் பரப்பில், ஒரு முக்கியமான பகுதியைப் பற்றிய அறிவும் தெளிவும் இப்பாடத்தினால் நாம் பெற்ற பயனாகும்.

1)
இயேசு காவியத்தில், இயேசுவின் கொள்கையைக் கண்ணதாசன் எவ்வாறு விளக்குகிறார்?
2)
அன்னை மரியாளைக் கண்ணதாசன் எவ்வாறு உவமிக்கிறார்?
3)
சுடர்மணி காப்பியத்தில் ஆசிரியர் இயற்கையை எவ்வாறு வருணித்துள்ளார்?
4)
சங்கப் பாடல்களை நினைவூட்டுவது எது?
5)
திருஅவதாரம் ஆசிரியர் கையாளும் இரண்டு தனித்தமிழ்ச் சொற்களைக் குறிப்பிடுக?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:12:47(இந்திய நேரம்)