Primary tabs
6.2 ஆறாம் வேற்றுமை
பெயரின் பொருளைக் கிழமைப் பொருளாக வேற்றுமைப்படுத்துவது ஆறாம் வேற்றுமை உருபு ஆகும். (கிழமை = உரிமை)
அது, ஆது, அ என்பன ஆறாம் வேற்றுமை உருபுகள். இவற்றுள், ‘அது’, ‘ஆது’, என்ற உருபுகள் ஒருமைக்கும், ‘அ’ என்ற உருபு பன்மைக்கும் வரும். ‘ஆது’ என்னும் உருபு இக்காலத்தில் பெரிதும் வருவதில்லை. ‘அ’ உருபும் வழக்கத்தில் இல்லை. எனினும் செய்யுளில் வரும்போது இவ்வுருபினை அறியலாம்.
ஆறாம் வேற்றுமைக்கு மட்டும் பயனிலை பெயராகவே இருக்கும்.
எடுத்துக்காட்டு
ஆறாம் வேற்றுமையின் பொருள் கிழமைப்பொருள் ஆகும். (கிழமை = உரிமை) உரிமையை உணர்த்தி வருவது கிழமைப்பொருள் எனப்படும். இது தற்கிழமை, பிறிதின்கிழமை என இருவகைப்படும்.
தற்கிழமையும் பிறிதின்கிழமையும்
தற்கிழமை என்பது தன்னோடு தொடர்பு உடைய (பிரிக்க முடியாத) கிழமை. பிறிதின் கிழமை என்பது தன்னிடமிருந்து வேறான கிழமை.
எடுத்துக்காட்டு
சொல் உருபு
ஆறாம் வேற்றுமைக்கு ‘உடைய’ என்பது சொல் உருபாகும்.
எடுத்துக்காட்டு
தசரதனுடைய மகன் தசரதனுடைய மக்கள்
என்னுடைய வீடு என்னுடைய வீடுகள்
ஆறன் ஒருமைக்கு அதுவும்
ஆதுவும் பன்மைக்கு அவ்வும் உருபாம் ; .............
தற்கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே!
(நன்னூல் : 300)