Primary tabs
-
1.4 களவிற்குரிய கிளவித் தொகைகள் - I
இயற்கைப் புணர்ச்சி வன்புறை தெளிவே
பிரிவுழி மகிழ்ச்சி பிரிவுழிக் கலங்கல்
இடந்தலைப் பாடு பாங்கற் கூட்டம்
பாங்கிமதி யுடம்பாடு பாங்கியிற் கூட்டம்
பாங்கமை பகற்குறி பகற்குறி யிடையீடு
இரவுக் குறியே இரவுக்குறி யிடையீடு
வரைவு வேட்கை வரைவு கடாதல்
ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்வயிற் பிரிதல்என் றொருபதினேழுங்
களவிற் குரிய கிளவித் தொகையே.(களவியல்-சூ.7)
களவுக் காலத்தில் தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி
முதலியோர் பேசும் பேச்சுகள் கிளவி என்று கூறப்படும்.
இக்களவிற்குரிய கிளவிகள் அல்லது செயற்பாடுகள் 17 என்று
நம்பியகப் பொருள் குறிப்பிடுகிறது. அவை:
(1)
இயற்கைப் புணர்ச்சி(2)வன்புறை(3)தெளிவு(4)பிரிவுழி மகிழ்ச்சி(5)பிரிவுழிக் கலங்கல்(6)இடந்தலைப்பாடு(7)பாங்கன் கூட்டம்(8)பாங்கி மதி உடம்பாடு(9)பாங்கியிற் கூட்டம்(10)பகற்குறி(11)பகற்குறி இடையீடு(12)இரவுக்குறி(13)இரவுக்குறி இடையீடு(14)வரைதல் வேட்கை(15)வரைவு கடாதல்(16)ஒருவழித் தணத்தல்(17)வரைவிடை வைத்துப் பொருள் வயின் பிரிதல்இக்கிளவித் தொகைகளுள் 1 முதல் 5 வரையில் உள்ளவற்றை
இங்குக் காண்போம்.1.4.1 இயற்கைப் புணர்ச்சிஇயற்கைப் புணர்ச்சி என்பது முன் பின் அறியாத தலைவனும்
தலைவியும் எதிர்பாராதவிதமாகக் கண்டு மகிழ்வதாகும். இது,
தெய்வப் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, காமப் புணர்ச்சி என்றும்
அழைக்கப்படும்.- இது காந்தருவ மணத்தோடு ஒத்திருப்பதால் இயற்கைப்
புணர்ச்சியாகும். - இது தெய்வத்தால் (விதி வசத்தால்) கூட்டப்படுவதால்
தெய்வப் புணர்ச்சியாகும். - இது முதன் முதல் கூடுவதால் முன்னுறு புணர்ச்சியாகும்.
- இஃது இருவரும் ஒத்த அன்பினால் கூடுவதால் காமப்
புணர்ச்சியாகும்.
இவ்வியற்கைப் புணர்ச்சி தெய்வ அருளால் நிகழ்வதும்
உண்டு; தலைவியின் முயற்சியால் நிகழ்வதும் உண்டு. தெய்வ
அருளால் நிகழும் போது முயற்சி இன்றி நிகழும். தலைவியால்
நிகழும் போது முயற்சியின்றி நிகழாது.1.4.2 வன்புறைவன்புறை என்றால் வலியுறுத்திக் கூறுதல் என்று பொருள்.
தலைவன் பிரிவானோ என்று தலைவிக்கு ஐயம் ஏற்படும். அந்த
ஐயப்பாட்டைப் போக்கும் வகையில் தலைவன் பேசுதல் வன்புறை
ஆகும்.1.4.3 தெளிவுமேற்கண்டவாறு தலைவன் வற்புறுத்திக் கூறிய
வார்த்தைகளைக் கேட்டத் தலைவி அவன் கூறுவது உண்மைதான்
என்று நினைப்பது தெளிவு ஆகும்.தலைவன் மாற்றம் தலைவி தேற்றம்
தெளிவாம் என்பர் தெளிந்திசி னோரே.(களவியல், சூ.14)
1.4.4 பிரிவுழி மகிழ்ச்சிகளவுப் புணர்ச்சியில் ஈடுபட்ட தலைவன், தலைவி
அவ்விடத்தை விட்டுச் சென்றபின் அப்புணர்ச்சியை நினைந்து
மகிழ்வது பிரிவுழி மகிழ்ச்சி ஆகும். இஃது இரண்டு வகைப்படும்.1.4.5 பிரிவுழிக் கலங்கல்களவுப் புணர்ச்சியில் ஈடுபட்ட தலைவன், தலைவி
அவ்விடத்தை விட்டுப் பிரிந்து சென்ற பின், அத்தலைவியை
நினைத்து வருந்துவது பிரிவுழிக் கலங்கல் ஆகும். இது மருளுற்று
உரைத்தல், தெருளுற்று உரைத்தல் என இரண்டு வகைப்படும்.
தோழியர்கள் வழிபடக்
கூடிய தலைவியைத்
தாம் கூடியது
வியப்பானது என்று
தலைவன் நினைப்பது.(1)
தோழியை வாயிலாகக் கொண்டு
தலைவியைக் கூடுவேன் என்று
தலைவன் கூறுதல்.(2)தலைவியின் பண்புகளைத்
தலைவன் கூறுதல்.(3)தலைவியின் பெற்றோரைத்
தலைவன் பாரட்டுதல்.(4)தலைவன் இரவில் உறக்கமின்றி
வருந்திக் கூறுதல்.
- இது காந்தருவ மணத்தோடு ஒத்திருப்பதால் இயற்கைப்