தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.7 தொகுப்புரை

  • 1.7 தொகுப்புரை
    • இப்பாடத்தில் நம்பியகப் பொருள் நூல், ஆசிரியர் பற்றி
      அறிந்து கொள்ள முடிந்தது.
    • அகப்பொருள் களவு, கற்பு என்று இரண்டு ஒழுக்கங்களை
      (கைகோள்) உடையது என அறிய முடிந்தது.
    • தமிழர்களின்     களவு     வழிப்பட்ட     மணம்
      வடமொழியாளர்களின் காந்தருவ மணத்தை ஒத்தது என்ற
      தெளிவு கிட்டியது.
    • கைக்கிளையானது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்று
      நான்கு வகைப்படும் என்பது தெரிகிறது.
    • களவிற்குரிய கிளவித் தொகைகள் பற்றிய விளக்கங்களைப்
      பெற முடிந்தது.
    • பழந்தமிழர்களின் களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கையை
      எதிர்நோக்கியே அமைந்திருந்ததை விளங்கிக் கொள்ள
      முடிகிறது.
    1.
    களவிற்குரிய கிளவித் தொகைகள் எத்தனை?
    2.
    களவிற்குரிய முதல் நான்கு கிளவித் தொகைகளைக்
    குறிப்பிடுக.
    3.
    இடந்தலைப்பாடு என்றால் என்ன?
    4.
    இரவுக்குறி இடையீடு எத்தனை வகைப்படும்? அவை
    யாவை?
    5.
    ஒருவழித் தணத்தல் என்றால் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:27:32(இந்திய நேரம்)