Primary tabs
-
3.6 தொகுப்புரை
இக்கட்டுரையில் தமிழ்ப் ‘பா’க்களின் இலக்கணமும் அவற்றின்
வகைகளும் விளக்கப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களின் பொது
இலக்கணம் கூறப்பட்டிருக்கிறது. வெண்பாவின் வகைகளான குறள்
வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை
வெண்பா, சிந்தியல் வெண்பா பற்றிய செய்திகள்
விளக்கப்பட்டுள்ளன. ஆசிரியப்பாவின் நான்கு வகைகளான
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில
ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆகியவை பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது. கலிப்பாவின் வகைகளான ஒத்தாழிசைக்
கலி, வெண்கலி, கொச்சகக்கலி ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
வஞ்சிப்பாவின் இரு வகைகளான குறளடி வஞ்சிப்பா, சிந்தடி
வஞ்சிப்பா ஆகியனவும் விளக்கப்பட்டுள்ளன. இறுதியாக
வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா பற்றிய
செய்தி இடம் பெறுகிறது.