Primary tabs
-
3.3 கலிப்பா
கலிப்பாவின் பொது இலக்கணம்:
(1)
சீர்மாச்சீரும், விளங்கனிச் சீரும் கலிப்பாவில்
வாரா. ஏனைய சீர்கள் வரும்.(2)தளைகலித்தளை மிகுந்து வரும். பிறதளைகளும்
கலந்துவரும்.(3)அடிஅ)அளவடிகளால் அமையும்.ஆ)குறைந்த அளவு நான்கடி. அதிக
அளவு புலவன் உள்ளக்கருத்தைப்
பொறுத்தது. வரம்பு இல்லை.(4)உறுப்புகலிப்பா ஆறு உறுப்புகளை உடையது. தரவு,
தாழிசை என்பன முதல் உறுப்புகள்.
அராகம், அம்போதரங்கம், தனிச்சொல்,
சுரிதகம் ஆகியன துணை உறுப்புகள்.(5)ஈறுகலிப்பா, இறுதியில் ஆசிரியச் சுரிதகமோ
வெண்பாச் சுரிதகமோ கொண்டு முடியும்.
அதாவது கலியடிகளின் இறுதியில் ஆசிரிய
அடிகளோ வெண்பா அடிகளோ வந்து
கலிப்பா முடியும்.(6)ஓசைகலிப்பாவுக்குரிய ஓசை துள்ளல் ஓசையாகும்.- கலிப்பாவின் வகைகள்
அடிப்படையில், கலிப்பா,1. ஒத்தாழிசைக் கலிப்பா2. வெண் கலிப்பா3. கொச்சகக் கலிப்பாஎன மூவகைப்படும். இவை ஒவ்வொன்றுக்கும் சில உட்பிரிவுகள்
உண்டு. இவற்றின் விரிவைப் பின்னர் வரும் பாடங்களில்
காணலாம்.3.3.1 ஒத்தாழிசைக் கலிப்பா(1)கலிப்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்.(2)முறையே தரவு உறுப்பு ஒன்றும், தாழிசை உறுப்பு
மூன்றும், தனிச்சொல் ஒன்றும், சுரிதக உறுப்பு
ஒன்றும் வரும். இவ்வாறு வருவது நேரிசை
ஒத்தாழிசைக் கலி எனப்படும்.3.3.2 வெண்கலிப்பா(1)கலித்தளை அமைந்து கலியோசை தழுவியும்,
வெண்தளை அமைந்து வெள்ளோசை தழுவியும்
வரும்.(2)ஈற்றடி சிந்தடியாய் முடிவது வெண்கலிப்பா
எனப்படும்.(3)இதில் ஆசிரியத்தளையும் கலந்து வரலாம்.(எ.டு)
ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்
தார் வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து(ஏர் - அழகிய, கோதை = மாலை, எருத்து = கழுத்து,
வார்மலர் = நீண்ட, மலர்போன்ற (கண்), தார் = மாலை, வரை
= மலை, மலி = மிகுந்த)
இப்பாடலில் கலித்தளைகளுடன் வெண்டளையும்
ஆசிரியத்தளையும் கலந்து வந்துள்ளன. ஈற்றடி சிந்தடியாக
வெண்பாப்போல அமைந்துள்ளது. ஆகவே இது வெண்கலிப்பா
ஆகும்.3.3.3 கொச்சகக் கலிப்பாகொச்சகம் = கொய்சகம், அதாவது புடவையின் கொசுவம்.
கொசுவ மடிப்புப் போல உறுப்புகள் பல அடுத்தடுத்து வருவதால்
இது கொச்சகக் கலிப்பா எனப்படுகிறது.
(1)
ஒரு தரவு மட்டும் தனியே வரலாம். தரவுடன்
தனிச்சொல், சுரிதகம் சேர்ந்தும் வரலாம்.(2)இரண்டு தரவு வந்து தனிச்சொல் சுரிதகம் சேர்ந்தும்
வரலாம்.(3)தாழிசை சில வரலாம்.(4)தாழிசை பல வரலாம்.(5)தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம்,
தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளும்
தம்முள் மயங்கியும், வெண்பாவினோடும்
ஆசிரியத்தோடும் மயங்கியும் வரலாம். இவ்வாறு
வருபவை எல்லாம் கொச்சகக் கலிப்பா ஆகும்.இவற்றுள், ஒரு தரவு தனித்து வரும் தரவு கொச்சகக் கலிப்பாவுக்கு மட்டும் இங்கு எடுத்துக் காட்டுக் காணலாம்.(எ.டு)செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஒங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே(கதம் = சினம், செயிர்த்து = சினந்து, ஆழி = சக்கரப்படை,
முருக்கி = அழித்து, எல்லைநீர் = இருண்ட தன்மையுடைய,
வியன் = அகன்ற, கொண்மூ = மேகம், மல்லல் = செழித்த,
மருமம் = மார்பு)
மேற்காட்டிய பாடலில் நான்கடித்தரவு ஒன்று தனியே
வந்துள்ளது. கலித்தளை மிகுந்து துள்ளல் ஒசை அமைந்துள்ளது.
ஆகவே இது தரவு கொச்சகக் கலிப்பா ஆகும்.