தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.0 பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    இதற்கு முந்தைய பாடத்தில் நால்வகைப் பாக்கள் மற்றும்
    மருட்பா ஆகியவற்றின் இலக்கணமும் அவற்றின் வகைகளின்
    இலக்கணமும் குறித்துப் படித்தீர்கள். ஒவ்வொரு பாவிற்கும்
    மூன்று இனங்கள் உண்டு. அவை பற்றி மேல் வகுப்பில் விரிவாக
    விளக்கப்படும். இங்கு அவற்றைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்
    காணலாம்.

    இனம் என்றால் என்ன?

    பா வகைகள் - பா இனங்கள் இவற்றுக்கிடையே என்ன
    வேறுபாடு?

    பாவின் பொது இலக்கணங்களைத் தவறாமல் பெற்று
    அமைபவை பா வகைகள். குறிப்பிட்ட பாவின் வகைகள் அந்தப்
    பாவுக்கு வரையறுக்கப்பட்ட செப்பல், அகவல் போன்ற
    ஓசைகளைத் தவறாமல் பெற்றிருக்கும். ஆனால் பா இனங்கள்
    நேரடியாகப் பாவின் இலக்கணங்களையும் ஓசைகளையும்
    பெற்றிருப்பவை அல்ல. பாவின் இலக்கணங்களுள் ஓரிரண்டு
    தன்மைகளை மட்டுமே கொண்டு, மற்றபடி பெரும்பாலும்
    வேறுபட்டிருப்பவற்றை எவ்வாறு வகைப்படுத்துவது என்று
    சிந்தித்த இலக்கண ஆசிரியர்கள்,     அந்த ஓரிரண்டு
    ஒப்புமைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பா இனம் என
    வகுத்தனர். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பாவுக்குரிய இனம்
    அந்தப் பாவின் இலக்கணங்களை எல்லாம் பெற்றிருக்கும் என்று
    எண்ணக்கூடாது என அறியலாம்.

  • பா இனம்

  • தாழிசை
    துறை
    விருத்தம்

    என மூன்று வகைப்படும். ஒவ்வொரு பாவும் இம்மூன்று
    இனங்களைக் கொண்டிருக்கும். நால்வகைப் பாவும் மூன்று
    இனங்களைக் கொண்டவை என்பதனால் பாவினம் மொத்தம்
    பன்னிரண்டு (4 x 3=12) ஆகும். அவை,




    என்பனவாகும்.

    இவற்றின் பெயர்களைக் கொண்டே ஒவ்வொன்றும் எந்தப்
    பாவின் இனம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:32:11(இந்திய நேரம்)