தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.7 தொகுப்புரை

    பாண்டியர்களின் குடைவரைக் கோயில்களும் அவற்றில்
    இடம்பெறும் சிற்பங்களும் நிறையவே கிடைக்கின்றன. பல்லவர்
    குடைவரைகளின்     கருவறைச்     சுவர்களில் இடம்பெறும்
    சோமாஸ்கந்தர் புடைப்பு உருவம் பாண்டிய     நாட்டில்
    திருப்பரங்குன்றம் குடைவரையில் மட்டுமே இடம் பெற்றுள்ளதைப்
    பார்த்தோம். அதுபோலப் பாண்டியருக்கே உரிய இரட்டைக்
    கருவறை அமைப்புடைய குடைவரைகள் மூன்றினைப் பற்றி
    அறிந்தோம். பல்லவர் படைப்பைப் போலவே சோதனை
    முயற்சியாகக் கழுகு மலை வெட்டுவான்     கோயில் ரதம்
    அமைந்துள்ளது. கட்டுமானக் கோயில்களில் முற்காலப்
    பாண்டியர் கோயில்கள் அழிந்தும், பெரு மாற்றத்திற்கு
    உட்பட்டும் போனதால் கட்டுமானக் கோயிற் சிற்பங்களை அதிக
    அளவில் காண இயலவில்லை. பிற்காலப் பாண்டியர்
    கோயில்களும் சிற்பங்களும் ஓரளவிற்குக் கிடைத்துள்ளன.

    ஓவியக் கலையைப் பொறுத்த அளவில் பாண்டியர் காலத்தைச்
    சேர்ந்த ஓவியங்கள் சித்தன்ன வாசல், மற்றும் திருமலைப் புரம்
    ஆகிய இரு இடங்களில் மட்டும் கிடைத்துள்ளன. எனினும்
    இவை இரண்டும் பாண்டியரது ஓவியக் கலைச் சிறப்பைப்
    பறை சாற்றுவனவாய் உள்ளன.

    1.
    பாண்டியர்களின் அஷ்டாங்க விமானக் கோயில்கள்
    எவை?
    2.
    பாண்டியர்களின் ஓவியங்கள் கிடைத்த இடங்கள் எவை?
    3.
    சித்தன்ன வாசல் ஓவியத்தைக் கண்டறிந்தவர்கள் யாவர்?
    4.
    திருமலைப் புர ஓவியம் யாரால் எப்பொழுது
    கண்டறியப்பட்டது?
    5.
    பாண்டியர் ஓவியங்களின் எச்சங்கள் காணப்படும்
    இடங்கள் எவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:40:49(இந்திய நேரம்)