Primary tabs
-
பாடம் -5
5. சமண பௌத்த சமயங்கள் வளர்த்த
பண்பாடுஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தியாவின் வடபகுதியில் தோன்றிய சமண பௌத்த
சமயங்கள் தமிழ்நாட்டில் எவ்வாறு மக்களுடைய
மதிப்பைப் பெற்றன என்பதை இப்பாடம் தெரிவிக்கின்றது.
இவ்விரு சமயங்களின் அடிப்படைக் கொள்கைகள்;
தமிழர்கள் வாழ்வில் இவை ஏற்படுத்திய மாற்றங்கள்;
இவை வளர்ந்ததற் கான சூழ்நிலைகள்; இவை
மக்களிடையே படிப்படியாக மதிப்பிழந்த நிலைக்கான
காரணங்கள் ஆகியவற்றை இந்தப் பாடத்தின் வழியாகத்
தெரிந்து கொள்ளலாம்.
