Primary tabs
-
பாடம் -4
4. சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த
பண்பாடுஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தியா பல சமயங்களை உருவாக்கிய ஒரு நாடு.
இச்சமயங்களில் சைவம், வைணவம் ஆகிய இரண்டும்
தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வளர்ந்தவை. சைவ
நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் பக்தி
இயக்கத்தின் முன்னோடிகள் ஆகத் திகழ்கின்றனர்.
இவர்களைப் பற்றியும், தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்தில்
இவர்களுக்கு உரிய பங்களிப்பைப் பற்றியும் இந்தப்பாடம்
விரிவாகக் கூறுகின்றது.
