தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 3

    d06133 இசை இலக்கண நூற்கள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

             இசை இலக்கண நூற்கள் என்ற இந்தப் பாடம் இசை இலக்கண நூற்கள் பற்றியும், இசை இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள இசை இலக்கணச் செய்திகளையும் கூறுகின்றது.

        இசை இலக்கண நூற்களில் அகத்தியம், இசை நுணுக்கம்,     கூத்தநூல்,     சங்கீதரத்னாகரம் பற்றிக் குறிப்பிடுகின்றது.

         பஞ்சமரபு என்ற இசை இலக்கண நூலில் காணப்படும் இசை பற்றிய கருத்துகளை விரிவாக எடுத்து உரைக்கின்றது.

        இசை இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை இலக்கணக் கூறுகளை விரிவாகவும், ஏனைய இலக்கியங்களில் காணப்படும் இசை இலக்கணக் கூறுகளைச் சுருக்கமாகவும் குறிப்பிடுகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • இந்தப் பாடத்தைப் படிப்பதால் மறைந்த இசை இலக்கண நூற்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • தமிழில் உள்ள இசை இலக்கண நூற்களோடு, வடமொழி நூற்களில் தமிழிசை இலக்கணச் செய்திகள் கூறப்பட்டுள்ள நிலைகளை உணர்ந்து கொள்ளலாம்.
       
    • பஞ்சமரபு என்ற இசை இலக்கண நூல் குறிப்பிடும் இசையமைதியினைப் புரிந்து கொள்ளலாம்.

    • இசை இலக்கணக் கலயைக் கூறும் சிலப்பதிகாரம், பெரியபுராணம், சிந்தாமணி போன்ற நூற்களைப் பற்றியும், அவை காட்டும் இசை அமைதியினையும் விளங்கிக் கொள்ளலாம்.
    • இசையைக் கற்போர் அதன் இலக்கண அமைதியைக் கற்றலும் அவசியம் என்பதை உணரலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:52:23(இந்திய நேரம்)