தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

        தமிழகத்தின் கலைப் பணியில் இசைக் கலைக்குத் தனியிடம்     உண்டு. இவ்விசைக் கலையை வளர்த்த பெரியவர்களாக இசைக் கலைஞர்கள் விளங்குகின்றனர். இவர்களைப் பற்றி அறிமுகம் செய்யும் வகையில் இப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது.

        இசைக் கலைஞர்கள் காப்பாற்றிய செய்திகள் முதற் பகுதியில் மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

        (1) பண்டைய இசைக் கலைஞர்கள்     
        (2) இடைக் காலத்திய இசைக் கலைஞர்கள்     
        (3) தற்கால    இசைக் கலைஞர்கள்

        அடுத்த பகுதி இசைக் கலைஞர்களின் இசைப் பணியை அறிமுகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இசைப் பொழிவுக்     கலைஞர், குரலிசைக் கலைஞர், கொன்னக்கோல் கலைஞர், குழலிசைக் கலைஞர் ஆகிய சிலரையும், இசை வளர்த்த நங்கையர்கள் பற்றியும் அறிமுகம் செய்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:54:02(இந்திய நேரம்)