Primary tabs
வீரமா முனிவர் சரித்திரச் சுருக்கம்
VII
பெஸ்கி யென்னும் வீரமாமுனிவர் ஜீவித்தகாலமோ மிகக் கொடுமை, துன்பம், கலகம் முதலியவற்றால் நிறைந்தது. அவரிருந்த நாடும் அவ்வாறே கலகம், யுத்தம், சர்ப்பனை இவைகளால் கலக்குண்டதினால் அவர் அக்கால காரியகர்த்தர்களுடன் சம்பந்தப்படாதவரா யிருப்பது கூடாது. எவ்வாறெனில், 1736ம்-ஆண்டில் வஞ்சகம், கொடுமை முதலிய துர்க்குணங்கள் குடிகொண்ட சந்தா ஸாஹேபு என்னும் நபாபு திருச்சிராப்பள்ளியை முற்றுகைபோட்டு அதைப் பிடித்துக்கொண்டு மதுரை நாட்டிற்குந் தாமே அரசனென்று பறையறை வித்தார். அவர் வேண்டுகோள்படி இவரவரிடஞ் சென்று வார்த்தை யாடினபோது அவருக்கு இவரிடத்தில் அதிகத் திருப்தி யுண்டாகித் தமக்குத் திவானாக இவரை யேற்படுத்திக் கொண்டது மன்றியிவருக் கினாமாக நான்கு கிராமங்க ளளித்தார்.
1740-ம் ஆண்டில் வேலூர் கர்னாடக நபாபாகிய தவுஸ்த் அலிகான் என்பவரைப் போய்த் தரிசித்து, 1739-u அக்டோபர்-t 29-s தமது சங்கத் தலைவர் அந்த நபாபுக்கு எழுதி யனுப்பிய நிருபத்தையுங் காண்பித்தார். இவை முதலிய காரியங்கள் அக்கால காரிய கர்த்தாக்களுட னிவருஞ் சம்பந்தப்பட்டா ரென்று விளக்குகிறது.1770-ம் ஆண்டில் மஹாராஷ்டிரர்கள் திருச்சிராப்பள்ளியை முற்றுகைபோட்டு 1741-ம் ஆண்டில் அதைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் மிகுந்த மத வைராக்கியமுள்ள இந்துக்களாதலால் சந்தாஸாஹேபின் திவானாகிய இவர் கிறிஸ்தவ குருவென்றறிந்தபோது கிறிஸ்தவர்களும் மகமதியரைப்போலவே அம்மஹாராஷ்டிரர்களுடைய பகைக்கு இலக்கானார்கள். இதை யறிந்த பெஸ்கி யென்பவரும் மற்றுமுள்ளவர்களும் மரணத்தினின்று தங்களைக் காத்துக் கொள்ளும்பொருட்டு ஓடி யொளிக்கும்படி நேரிட்டது. ஆகவே அவர் முதல் முதல் போன இடம் இராமநாதபுரம். அங்கிருந்து திருநெல்வேலிக் கடுத்த வோர் கரைதுறைப்பட்டணத்தைச் சேர்ந்து அங்கே சில காலம் தங்கியிருந்தார். அவ்வூருக்கு மணப்பாடு என்று பெயர். அது அக்காலத்தில் உலாந்துக்காரருக் குரியது. அதிலே உரோ