Primary tabs
நன்னூலுக்கு இப்போதுள்ள உரைகளில் மிகப்பழமையானது மயிலை நாதர் உரை. மாதவ சிவஞான முனிவரால் மேற்கோள் காட்டப்பெறும் செய்திகள் எல்லாம் மயிலை நாதருரையில் உள்ளன. முதன் முதலாக நன்னூலுக்கு உரை எழுதிய மயிலை நாதருடைய பெருமையை யாவரும் அறிய வேண்டுமென்று எண்ணி அந்த நூலை ஐயரவர்கள் ஆராயத் தலைப்பட்டுப் பல இடங்களில் தேடிக்கொண்டு வந்திருந்த ஏட்டுச் சுவடிகளை வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து நல்ல முறையில் 1918 ஆம் ஆண்டுத் தமிழ் உலகுக்கு அளித்தார்கள். பரிபாடலை ஆராய்ச்சி செய்து வரும்போதே இந்நூலையும் ஆராய்ந்தார்கள். இந்நூல் சூத்திரங்கள் விளங்குதற்பொருட்டுச் சந்தி பிரித்துப் பதிப்பித்துள்ளார்கள். இவ்வுரையின் சிறப்பை ஐயரவர்கள் எழுதியுள்ள முகவுரையின் மூலமாக அறியலாம்.
இந்நூல் தமிழ் வளர்ச்சித்துறை அரிய நூல்களை வெளியிட நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நூல் நிலைய முதற் பதிப்பாக வெளிவருகின்றது.
தமிழ் வளர்ச்சித் துறையினருக்கு நூலகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலைக் குறுகிய கால அளவில் அச்சிட்டுக்
கொடுத்த தி சிட்டி பிரின்டிங் அச்சக
உரிமையாளருக்கு நன்றி.
பெசன்ட் நகர்
8.3.1995
வித்துவான் சு. பாலசாரநாதன்
ஆராய்ச்சித்துறை
டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்