தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

நூலாசிரியர் வரலாறு
xi

செய்த சத்தநூல் பற்றிக் கூறுவர்’’ (கலித்துறை, 12, 49) என்று வந்துள்ள வாக்கியங்களும் இங்கே கருதற்பாலன.

இவர் துறவறத்தினர்; ‘‘பவணந்தி யென்னு நாமத் திருந்தவத் தோனே’’ (சிறப்பு. அடி, 22) என்பதும் நந்தி முனிவரென இவர் வழங்கப்படுதலும் இதனைப் புலப்படுத்துகின்றன; சைனருள் துறவிகள் நந்தியென்று வழங்கப்படுதலை அச்சணந்தி, வச்சணந்தியென்னும் பெயர் வழக்குக்களாலும், ‘‘கனக நந்தியும் புட்பக நந்தியும் பவண நந்தியுங் குமணமா சுனக நந்தியுந் திவண நந்தியும்’’ என்னும் தேவாரத்தாலும் அறியலாகும்.

திருவல்லத்திற்கு வடக்கேயுள்ள வள்ளிமலையின் குகையொன்றில் அமைத்திருக்கும் பழைய சைனபிம்பங்களுள் ஒன்றன்கீழே வரையப்பெற்றிருக்கும் அடியிற்காட்டிய சாஸனத்திற்கண்ட பவணந்தி பட்டாரரென்பவர் இந்நூலாசிரியராக இருத்தல் கூடுமென்று சிலர் கருதுகின்றனர்; சில காரணங்களால் இஃது அங்கீகரிக்கத்தக்கதாயினும் — சாஸனத்தின் காலம் விளங்காமையால் இதனை உறுதியாக எண்ணக்கூடவில்லை.

‘‘ஸ்வஸ்திஸ்ரீ பாணராயர் குருகளப்ப பவணந்தி பட்டாரர சிஷ்யரப்ப தேவஸேன பட்டாரர பிரதிமா’’ [Epigraphica Indica, Vol. IV. Page, 142.]

இவருடைய ஆசிரியர் சனகை யென்னுமூரிலிருந்த சன்மதி முனிவரென்பார்; இதனை, ‘‘பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள், பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி’’ (சிறப்பு. அடி, 20-21) என்பதனாலும்,
 

‘‘தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்தன்
நன்னூ லுரைத்த பவணந்தி மாமுனி நற்பதியும்
சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியும்
மன்னூபுரத் திருவன்ன மின்னே தொண்டை மண்டலமே’’
 

என்னும் தொண்டைமண்டலசதகச் செய்யுளாலும் அறிக.

மாணாக்கரை ஞானபுத்திரரென்றும் ஆசிரியரை ஞானபிதாவென்றும் வழங்குதல்
மரபு. சைனர்களால் தெரியவருகின்ற கன்னபரம்பரைச் செய்தியும் இதுவே. இங்கே கூறிய சனகையென்பது முற்காலத்திற் சனநாதபுரமென்று வழங்கி வந்ததாக மயிலைநாதருரையால் தெரிகின்றது; இதைப்பற்றி விசாரித்த பொழுது சனநாதபுரமென்னும் பெயரையுடைய ஊர்கள் தென்னாட்டில் நான்கிற்குக் குறையாமலுள்ளனவென்று திருவனந்தபுர ஸமஸ்தானத்துச்


புதுப்பிக்கபட்ட நாள் : 24-05-2018 17:20:40(இந்திய நேரம்)