Primary tabs
XLIII
சாரியை இயற்கை உறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்
அஃறிணை விரவுப்பெயர்க்குஅவ்வியல்நிலையலும்
மெய்பிறி தாகிடத்து இயற்கை யாதலும்
அன்ன பிறவும் தன்னியல் மருங்கின்
மெய்பெறக் கிளந்து பொருள்வரைந்திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப.
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய
அவைதாம்,
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர்.
அளவும் நிறையும் எண்ணும் சுட்டி
உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்
தத்தம் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉம் காலந் தோன்றின்
ஒத்தது என்ப ஏயென் சாரியை.
இறுதி வகரம் கெடுதலும் உரித்தே.
ஐவரு காலை மெய்வரைந்த கெடுதலும்
செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப.
முன்னிலை மொழிய என்மனார் புலவர்
தேற்றமும் சிறப்பும் அல்வழி யான.
மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகாஅ.