Primary tabs
XLIX
மருவ வலிமெலி மிகலு மாகும்.
வன்மைக் கினமாய்த் திரிபவு மாம்பிற.
மல்வழி யுயிரிடை வரினியல் பும்முள.
முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே.
யியல்பு மிகலு மாகும் வேற்றுமை
மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல்.
தாழுங் கோல்வந் துறுமே லற்றே.
யவற்றோ டுறழ்வும் வரிவரி னாமெலி
மேவி னணவு மிடைவரி னியல்பு
மாகு மிருவழி யானு மென்ப.
மாகவும் பெறூஉ மல்வழி யானே
தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும்
வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரி
னியல்புந் திரிவு மாவன வுளபிற.
பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம்