தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


நூலாசிரியர் தம் உரையுள்
எடுத்தாண்டுள்ள தொல்காப்பிய
நூற்பாக்கள் பின் வருமாறு:

5
எழுத்தெனப்படுப
அகர முதல்
னகர இறுவாய் முப்பஃ தென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே,


தொல்1
 
அவைதாம்
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.


2
 
குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.
38
 
ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்.
39
 
 
 
6
அஇ உஅம் மூன்றும் சுட்டு.
31
 
சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி
ஒட்டிய மெய்யொழித்து உகரம் கெடுமே.

176
 
சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே.

177
 
சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்.

205
 
சுட்டின் இயற்கை முற்கிளந் தற்றே.
238
 
 
 
8
குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே.

41
 
ஐஒள என்னும் ஆயி ரெழுத்திற்கு
இகர உகரம் இசைநிறை வாகும்.

42
 
 
9
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:31:39(இந்திய நேரம்)