Primary tabs
வேற்றுநூல் நூற்பாக்கள்
தான்தற் புகழ்தல் தகுதி அன்றே.
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே.
(இவை இரண்டு நூற்பாக்களும் பனம்பாரம்)
ஒற்றொடு வருதலொடு குற்றொற்று இறுதிஎன்று
ஏழ்குற் றுகரக்கு இடன்எனல் மொழிப.
நால்வகைப் படூஉம்அளவு ஆய்வரும் இடனே.
திரிபுவேறு உடையது புடைநூல் ஆகும்.
ஐயப்பாடு இன்றி அணையுமாம்-மைதீர்ஒற்று
இன்றியும் செய்யுள் கெடின்ஒற்றை உண்டாக்கும்
குன்றுமேல் ஒற்றளபும் கொள்.
யாப்புஅழி யாமைஎன்று அளபெடை வேண்டும்.
சுட்டுதற் கண்ணேயாம் சொல்.