தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

444


444

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


சிறுகாப்பியம், காப்பியத்துக்குப் பெயரிடல் முதலியன.

‘அறையும்இதில் சிலகுறைபாடு எனினும் குன்றாது
 
அறம்பொருள்இன் பம்வீட்டில் குறைபா டாகப்
பெறுவதுகாப் பியமாகும்; புராணம் ஆகும்;
 
பேசின்முதல் நூல்பொருளொடு அளவு தன்மை
செறிமிகுதி செய்வித்தோன் கருத்த னானும்
 
திகழும்இடு குறியானும் நூற்குப் பேராம்;
உறுகலிவஞ் சிப்பாக்கை யறத்துக்கு ஆகா;
 

உரைப்பதுஇனி வாழ்த்தினுக்குஎப் பாவும் ஆமே.’

 

 16

கவிப்புலவன் இயல்
‘பாடுமுறை தொடர்செய்யுள் தெரிக்க வல்ல
 
பாவலன்நற் குணம்குலம்சீர் ஒழுக்கம் மேன்மை
நீடுஅழகு சமயநூல் பிறநூல் மற்று
 
நிகழ்த்துநூல் இலக்கணநாற் கவிஉள் ளானாய்
நாடுஉறுப்பில் குறைவிலனாய் நோயி லானாய்
 
நாற்பொருளும் உணர்ந்துகலை தெளிந்து முப்பான்
கூடும்வயது இகந்துஎழுபான் வயதின் ஏறாக்
 
குறியுடைய னாகில்அவன் கவிதை கொள்ளே.’
 

17

புரவலன் கவியைக் கோடல்

 

‘கொள்ளும்இடம் விதானித்துத் தொடையல் நாற்றிக்
 
கொடிகதலி தோரணம்பா லிகைநீர்க் கும்பம்
துள்ளுபொரி விளக்குஒளிர முரசுஇ யம்பத்
 
தோகையர்பல் லாண்டுஇசைப்ப மறையோர் வாழ்த்த
வெள்ளைமலர்த் துகில்புனைந்து தவிசின் மேவி
 
வேறும்ஒரு தவிசுஇருத்திச் செய்யுள் கேட்டே
உள்ளம்மகிழ் பொன்புவிபூண் ஆடை மற்றும்
 
உதவிஏழ் அடிபுலவ னுடன்போய் மீளே.’
 

18



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 17:51:31(இந்திய நேரம்)