தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட்டியல் - பிற்சேர்க்கை 1

445



புரவலனுக்குக் கேடு
 

‘உடம்படச்செய் யான்செய்யுள் பிறர்பால் கூறில்
 
உற்றதிரு அவனிடைப்போய் ஒதுங்கும்; அன்றித்
 
திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித்
 
தெருவுமயா னம்புற்றுக் காளி கோட்டத்து
 
இடம்தனில்அங்கு அவன்தன்னை நினைந்து சுட்டால்
 
ஈராறு திங்கள்தனில் இறுதி யாவன்;
 
தொடர்ந்துசெயாது உளம்நொந்தால் சுற்றத்தோடும்
 
தொலைவன்இஃது உண்மை, அகத் தியன்தன் சொல்லே.’

19

நற்கவியும் தீக்கவியும்
 

‘அகத்தியன்சொல் எழுத்துமுதல் குற்றம் செய்யுட்கு
 
அடையாமல் தொடைகொண்டால் அடையும் செல்வம்
 
மகத்துஉயர்நோய் அகலும்;அக லாது சுற்றம்;
 
வாழ்நாளும் அதிகம்; வழி மரபு நீடும்;
 
தொகைக்குற்றம் பாட்டுஉறின்செல் வம்போம்; நோயாம்;
 
சுற்றம்அறும்; மரணம்உறும்; சோரும் காலும்;
 
சகத்தவர்க்குஈது அன்றியே தேவர்க்கு ஆகில்
 
தப்பாதுஇப் பலன்கவிதை சாற்றி னார்க்கே.’  

 20



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 17:59:41(இந்திய நேரம்)