Primary tabs
வசனிக்கக் கேட்போர் மாதவர் ஆவர்;
சந்தப் பொருளைச் சபையினர் உளங்கொளச்
சதிரில் படிப்போன் தமையன் ஆகும்;
பொலிந்த குழுவில் புகழ்ந்து கொள்வோர்
உறவின் முறையர்என்று ஓத லாகும்;
இன்பமுற்று அதனை இனிது கேட்டும்
பரிசு கொடுப்போன் பர்த்தா ஆமே.’
57
பரிசில் வழங்காதவன் அழிவு
‘கொள்ளான் பனுவலைக் கொள்வோன் தனக்குப்
பெயர்முத லவற்றைப் பெயர்த்தும் அழித்தும்
மீட்டுஒரு பேரின் விரைந்துஅதில் சேர்த்தி
மொழிந்த வழுக்களான் முன்மொழி எடுத்து
வைத்துஅவன் இயற்பெயர் தோறும் மாளச்
செய்யுள் பெயர்த்துச் செந்நூல் சுற்றி
அதன்மிசைச் செம்மலர் அணிவுறச் சாற்றிக்
கவர்தெருப் புறத்தும் காளிகோட் டத்தினும்
பாழ்மனை அகத்தும் பழுத்த இரும்பினால்
ஆங்கவன் தனைநினைந்து அகம்நொந்து கடினே
ஈராறு திங்களின் இறுதி யாவன்;
இங்ஙனம் இயற்றாது இதயம் நொந்துகொண்டு
இருக்கினும் கிளையொடும் இறுதி யாவன்என்று
ஓதியது அகத்தியர் உண்மைநூல் நெறியே.’
58
குற்றமற்ற பாடல் கோடலின் பயன்
‘எழுத்து முதலிய இலக்கணம் ஐந்தினும்
மங்கலம் முதலாய் வகுத்தமுன் மொழியினும்
சான்றோர் விதித்த தன்மையின் வழுவாது
தொடையின் முறையில் நிற்கக் கேட்கச்