Primary tabs
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
பண்பாய வன்வழிப் பிறர்பொருள்கள் தோன்ற உ
பாயமாம் சமரம் விரும்
பலும் அவன் வெற்றியைக் கருதி இருசீரடிப்
பாவும் முச்சீரடியும் இற்
செம்பாகமாக நாற்சீர் முதல் அமைந்திடச்
சீர்உற்ற அடி இரண்டாய்ச்
செப்பு பஃறாழிசையி னோர்கவிதையாய்ச்
செப்பிடின் பரணி யாமே.’3
6
கலம்பகம், வருக்கக்கோவை, மும்மணிக்கோவை
‘அரிய ஒருபோகு வெண்பாக் கலித்துறையும்
அன்பாய்க் கலி உறுப்பினாலே
அம்புய வகுப்பு மதங்கம் மறமும் காலம்
அம்மானை கார்குறம் பாண்
ஆடும் ஊசல் தவம் சம்பிரதம் வண்டு களி
அலர்தழை தூது இரங்கல்
ஆன கைக்கிளை சித்து என்று வகை ஈரொன்பது
ஆம் உறுப்புக்கள் இயைய
வருமருட்பா கலிப்பா கலிவிருத்தம்
மடக்குக் கலித்தாழிசை
மன்னும் ஆசிரிய விருத்தம் ஆசிரியமும்
வஞ்சித்துறை வெண்டுறை
வஞ்சிச்செயுள் வஞ்சியாம் வஞ்சியாம் விருத்தங்களும் இ
வற்றாலும் இடையிடையினின்
மருவுவெண்பாக் கலித்துறை விரவி அந்தாதி
வரன்முறை தொடையதாக