தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பாட்டியல் - பிற்சேர்க்கை 3

467


          உரியதேவர்க்கு நூறு அந்தணர்க்குத் தொண்ணூறு
             உடன்ஐந்தும் அரசருக்கே

          உற்றிடும் தொண்ணூறு வணிகருக்கு ஐம்பான்
              உரைசதுர்த்தருக்கு முப்பான்

          ஓதுவர் கலம்பகத்துக்கு4 உரியதாம்; அகரம்முதல்

              உறும் எழுத்துக்கள் தம்மில்

 

          உயிர்முதல் மொழிக்கு உரிய அக்கரத்து ஆதியாய்

              உயர்காரிகைத் துறையினால்

 

         நெறிசுரிக்குழல் மாதர் காட்சிமுதலாய்க் கூறின்

              நிலை வருக்கக் கோவை5 யாம்;

 

          நேரும் ஆசிரியமும் வெண்பாவும் நேரசை

              நிரையசை எழுத்தும் எண்ணி

         

          நீள்கலித்துறையுடன் முப்பது அந்தாதியின்

              நெறிபெறத் தொடையதாக

         

          நிலைபெற உரைப்பதே மும்மணிக் கோவை6 யாய்

              நீள்நிலத்து உரைசெய்வரே.’      

     7

 

அகப்பொருட் கோவை, ஐந்திணைச் செய்யுள்

 

     ‘இருவகைப் பட்டமுற்பொருளுடன் பன்னான்கு

              எனும்கருப் பொருள்களோடு

 

          ஈரைந்து உரிப்பொருள் பொருந்து கைக்கிளைஆதி

              இயைவுற்ற அன்புடைத்தாய்ப்

 

     பெருகுகாமப் பகுதியாம்கள வொழுக்கமும்

              பெண்கற்பு ஒழுக்கத்தினும்

 

          பேதம்அன்றிக் கட்டளைக் கலித்துறையினைப்

              பெறும்ஓர் நானூற்றால்திணை



புதுப்பிக்கபட்ட நாள் : 24-05-2018 11:45:54(இந்திய நேரம்)