தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

438 இலக


438

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்



கணநாட் பொருத்தம்
 

‘வான்இலகு நேர்,குருவே நிரையாம், வெண்சீர்
 
வரில்நப தவகணம்நாள் பரணி மும்மீன்
 
 ஊனம்மிகு புனர்பூசம் பூசம் வாழ்நாள்
 
 உற்றபுகழ் சூனியநோய் பலன்கள் ஆகும்,
 
 தேன்அனையாய்! வஞ்சிச்சீர் அடைவே நான்கும்
 
திகழ்சர மயகணம்,நாள் சோதி ஆரல்
 
தானம்உறு கேட்டைசத யந்தான் கேடு
 
சாவுதிரு மகிழ்ச்சிபலன் தரத் தொடங்கும்.’       
 

 9

  ‘துறக்கம்மதி வான்பரிதி காய்ச்சீர் முன்னும்
 
 சூழ்காற்றுத் தீநிலம்நீர் கனிச்சீர் பின்னும்
 
 நிறுத்துகணம் இவ்விரண்டாம் அகவற் சீரின்
 
  நேர்ஈறு வெள்ளைச்சீர் நிறைவஞ் சிச்சீர்
 
சிறப்புடைஇவ் விரண்டும்ஆம் கணப்பேர் மற்றும்
 
திகழ்இயற்சீர் அயன்திருக்கோக் கருடன் முன்னாம்
 
வெறுத்தபின்னு மாம்என்ப இறைவன் நாட்கு
 
  மேவுகண நாட்பொருத்தம் வேண்டும் மாதோ.’  
  
 

10

புறனடை

 

‘ஆவதுமங் கலத்தேற்ற பரியாயச் சொல்
 
 அடைகொடுத்து முதற்சீருக்கு அடுத்த செய்யுள்
 
மேவுதலை இடைகடைமங் கலச்சொல் வைத்து
 
விதிஎடுத்துப் பால்வருணம் மயங்கும் என்ப;
 
வாவும்ஒரு நற்கதியால் முன்னோர் நூலின்
 
 மங்கலத்தால் நஞ்சுசில அமுதம் ஆகும்;
 
தூஅமுதம் எனின்கதியில் பழுது போமேல்
 
தொடர்கலப்பாம் மரபினது தொடக்கம் சொல்வாம்.’ 
 
 

 11
 



புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 16:26:05(இந்திய நேரம்)