‘கருதும்உயிர் அடைவேநான்கு ஐந்து மூன்று
கார்த்திகையே பூராடம் உத்தி ராடம்;
உரைதரு க-வரியின்நான்கு இரண்டு மூன்று
மூன்றுஓணம் ஆதிரையே புனர்தம் பூசம்;
இருமைகொள் ச-வரியின்நான்கு ஐந்து மூன்று
இரேவதிஅச் வனிபரணி; ஞகரம் மூன்றும்
வரும்அவிட்டம்; தகரம்இரண்டு ஏழு மூன்று
வளர்சோதி விசாகமே சதயம் மன்னும்.’
‘சதிதிகழ் ந-வினில்ஆறு மூன்று மூன்றும்
தருமனுடன் கேட்டையே பூரட் டாதி;
திதம்மிகும்ப - வரின்நான்கு இரண்டோடு ஆறுஉத்
திரம்முதல்மூன் றாம் ; ம-வில் ஆறும் மூன்றும்
இதமுடன்மூன் றும்மகம்ஆ யிலியம் பூரம்;
யா-உத்தி ரட்டாதி; யூயோ மூலம்;
உதவிய வ-முதல்நான்கும் ஒழிந்த நான்கும்
உரோகணியாம் மிருகசீ ரிடம்ஆம் பேர்நாள்.’
‘பேர்நாள்உற் பவநாளா தல்மூ வொன்பான்
பிரித்துஒன்று மூன்றுஐந்துஏழ் ஆகாது; எட்டாம்
கூர்இராசி யும்வயினா சிகமும் ஆகா;
குறில்வன்மை ஈறுஒழிக்கில் வானோர்க்கு ஆகும்;
நேர்நெடிலின் முதல்நான்குஈறு இல்லா மென்மை
நிலமக்கள் கதிமுதற்சீர்க்கு ஆகும்; ஒஓ
ஏர்மருவு யரலழற விலங்காம்; மற்றை
எழுத்துநர கக்கதி; முன் இவைவா ராவால்.’